மாமியாருக்கு தட்சணை:
நீ தருவது,
என் கருவறையின் 10 மாதக் கூலியம்மா!!!
என் பாலின் விலையம்மா!!!
என் எதிர் கால இன்சூரன்ஸம்மா!!!
நீ,
வரதட்சணை தந்தால் நான் தருவது,
வரன்தட்சணையம்மா!!!
கணவருக்கு தட்சணை:
நீ தருவது,
என் மூன்று முடிச்சின் சம்பளமடி!!!
என் வாழ்வில் ஏணியடி!!!
அது தான் என் மதிப்படி!!!
நீ,
வரதட்சணை தந்தால் நான் தருவது,
சேயடி!!!
மனைவிக்கும் தட்சணை:
மணப்பெண்ணிடம்
பணம் வாங்கும் - நீங்கள் என்ன
பிணங்களா?
இல்லை,
ஒரு நாள் பரம்பரை பிச்சைக்காரர்களா?
பாசத்திற்கும் நேசத்திற்கும்
விலை பேசும் வியாபாரிகளா?
இல்லை,
பொய் அன்பை தரும் விபச்சாரிகளா?
வரதட்சணை வாங்கும் மூடர்களே!
கேளுங்களேன் வாரதட்சணை!
20 வருடம் காப்பாற்றிய
கற்பினை
காலமாக்கி
ஓர் வருடம் (இ)கஷ்டப்பட்டு
கருவை
உருவாக்கி
வாழும் காலம் வரை
கரங்களாய்
கண்களாய்
கடவுளாய் இருக்கும்
என்னிடமா தட்சணை ???
அம்மி மிதித்த என்னிடம்
இம்மியளவு புன்னகை எதிர்பாராமல்
பொன்நகை எதிர்பார்ப்பவனே!!!
அருந்ததியை மட்டும் நிமிர்ந்து பார்த்து
வேறுகதி இல்லையென வரும் எனக்கு
சதி செய்யும் வெட்டியானே!!!
என் கணவன் பதவிக்கு உன்னை அமர்த்த
நான் வரதட்சணை தரவேண்டும் என்றால்,
நான் பார்க்க போகும்,
மனைவி
மருமகள்
தாய்
வேலைகளுக்கு
வரவரவரதட்சணை
தரவேண்டுமடா!!!
என் மன்னனே!!!
No comments:
Post a Comment