9am -ல் சென்றேன் நைல் நதியோரம்
திடிரென தாக்கியது ஒரு மின்னல்
பயந்தேன் பின் பார்த்தேன் பின் ரசித்தேன்
அது மின்னல் கோடி சேர்ந்த ஒரு கொடியென
அப்போது கதிரவன் மறைந்திருந்து டார்ச் அடிக்க
உனக்கு கண் கூசும் என் பின்னால் ஒளி என்றேன்
ஓடி ஒளிய, ஆனது 9pm
தெரிந்தது அழகு
அதனை மூடியது பனி
அதன் பணி போல்
அவ்வசந்தம் என் அருகில் வர என்னில் வெடித்தது
அணு உலை
அப்போதும் ஓர் இன்னிசை மெல்லிசையாய்
அது மூச்சு
அருகில் இடியும் வந்து முழங்க
அது பேச்சு "
அதில் இதை அவள் சொன்னாள்
பின்
இதயத்தை இடமாற்ற
மயங்கி கண் மூடி தேனில் நனைந்தேன்
திடிரென கண் திறந்தேன்
அது என் Dream-ல்
நனைந்தது மழையில்...
No comments:
Post a Comment