Wednesday, 17 October 2012

18 - முடிந்ததுக் கதை 1 - அரசியல்


அரசியல்

அன்பான
ஆக்கபூர்வமான
அக்கால அரியணைக்கு
நிகராக - இக்கால
அரசியலா???

ஐந்தாண்டு ஆட்சியோ
முடியப்போகும் நேரம்
அடுத்தக் கட்டம்
மலையேறிக் கொண்டிருந்தது

எதிர்க்கட்சியோ
ஐந்தாண்டு அமரா
ஆத்திரத்தினை, ஒலிப்பெருக்கியால்
ஆற்றிக் கொண்டிருந்தது

மக்களோ
எவனோ மிட்டாய் கடையை
முறைத்தது போல்
குறைப்பதை
பார்த்துக் கொண்டு
மட்டும் இருந்தனர்

அவர்கள் கட்சினரோ
வரவு முன் செலவு
என எண்ணி
தண்ணியாய்
செலவு செய்தனர்

தண்ணீர் கிடைக்காத
இவ்வாட்சியை விட
தண்ணீ தரும்
இவர்கள் மேல்
எண்ணினர் குடிமக்கள்

பக்க பலத்திற்கு
மத்திய ஆட்சி வர
கூட்டத்தில் மக்கள்
பிரியாணியை
எதிர்பார்த்திருந்தனர்

ஆளுங்கட்சியோ
இப்போது விளைச்சல்
அமோகமாக இருப்பதால்
அடுத்த குத்தகையை
கைப்பற்ற எண்ணினர்

அவர்கள் கட்சினரோ
ஐந்தாண்டு அமுக்கியதில்
சில்லறைகளை
தலைக்கு 1௦௦௦
இறைத்துக் கொண்டிருந்தனர்

ஐய்யய்யோ...
என் வீட்டில் வெறும்
9 பேர் தான்
மக்கள்தொகை பெருக்கும் சங்கம்

பக்க பலத்திற்கு
மத்திய எதிக்கட்சி வர
கூட்டத்தில் மக்களோ
கூட்டமாய் வேறு
கூட்டணி அமைத்தனர்

இருக்கட்சினர்களும்
கோலிவுட்டை
குளத்தில் இறக்க
அவர்களும் ஆழம் தெரியாமல்
அவமானப்பட்டனர்

தொலைக்காட்சியில்
இவர்கள் தொல்லை
என வெளியே வந்தால்
அங்கேயும் தொல்லை
மேடை போட்டிருந்தது

குழந்தைக்கு பலகை
வாங்கி தரா மூடர்கள்
கட்-அவுட் பலகையை
கட்டிக் கொண்டிருந்தனர்

சீரியல் லைட்டுக்கு
மின்சாரம் போக
சிரித்துக் கொண்டிருந்தது
வீட்டு மின்சாரம்

புதிய
சலுகைகளும் இலவசங்களும்
பிறந்ததை
கொண்டாடினர்
அரசு ஊழியர்கள்

பொய்களும் வண்டிக்
கட்டிக் கொண்டு
வலப்பக்கம் ஒரு பொய்
இடப்பக்கம் ஒரு பொய்
என மாறி மாறி
மாரி பொழிந்தது

தேர்தலோ
மும்மூரமாய் வர
கள்ள ஓட்டுகளும்
நல்ல ஓட்டுடன்
ஒட்டி பிறந்தது

வாக்கு எண்ணிக்கையில்
நாடு நடுங்கிக் கொண்டிருந்தது

இருக்கட்சிகளும்
கூட்டணிக் கட்சிகளை
 எதிர்ப்பார்க்க
கூட்டணி தலைவர்களோ
தரசு வைத்திருந்தனர்

ஏதோ ஒரு கட்சி
ஆட்சிக்கு வர
சாட்சி இல்லாமல்
மீண்டும்
-> முடிந்ததுக் கதை

1 comment:

  1. யார் மனத்தையும் புண்படுத்த அல்ல...
    புண்படுத்தினால் மன்னிக்கவும்....

    ReplyDelete