Monday, 19 November 2012

34 - காத்திரு தோழி

ரசித்தே காத்திருந்த உன்னை, 
காத்திருக்க வைத்து
 ரசித்தேன்...

Friday, 9 November 2012

33 - தீபாவளி - Diwali


வாடி வதங்கி கிடக்கிறது
விடுதி நாய்
தீபாவளி விடுமுறை

Monday, 5 November 2012

32 - நன்றி


எலும்பிட்ட கடைகாரனுக்கு,
நன்றியுடன் நாய்...
அடுத்த நாள்,
கொக்கியில்...

Thursday, 25 October 2012

31 - தோல்வி - I Failed


கஜினியும் தோற்றான்
தோற்பதில் என்னிடத்தில்
நானோ உன்னிடத்தில்

30 - காதல் - LOVE


என் ஏழு ஜென்ம காதலும் உன்னோடு
          விட்டு வைக்காது என்னை உயிரோடு
தேக்கி வைத்ததை இறக்க வேண்டும்
          உன் தேகம் முழுக்க நிரப்ப வேண்டும்

நீ முத்தம் ஒன்று தந்தால்,
          என் மோட்சம் முற்றி போகும்!
நீ கடை கண்ணில் கண்டால்,
          என் கற்பு கலங்கி போகும்!

உன் ஒவ்வொரு சொல்லுக்கும் என்  செல்கள் வெடிக்குமே!
          செல்கள் வெடித்து செயலை கெடுக்குமே!
காற்று கரை கடந்து என் நெஞ்சை முட்டுமே!
          நெஞ்சில் நம் நினைவுகள் நுரைக்குமே!

29 - வஞ்சி


வாரணம் ஆயிரம் மதத்தினை
வஞ்சி அடைவாள்
அவளால் பித்தடைந்த
அவனால்...



Monday, 22 October 2012

28 - வேண்டும் வரதட்சணை - Dowry should be


மாமியாருக்கு தட்சணை:
நீ தருவது,
               என் கருவறையின் 10 மாதக் கூலியம்மா!!!
                                             என் பாலின் விலையம்மா!!!
                                என் எதிர் கால இன்சூரன்ஸம்மா!!!

நீ,
   வரதட்சணை தந்தால் நான் தருவது,
                                                    வரன்தட்சணையம்மா!!!

கணவருக்கு தட்சணை:
நீ தருவது,
                   என் மூன்று முடிச்சின் சம்பளமடி!!!
                                       என் வாழ்வில் ஏணியடி!!!
                                        அது தான் என் மதிப்படி!!!
நீ,
   வரதட்சணை தந்தால் நான் தருவது,
                                                                          சேயடி!!!

மனைவிக்கும் தட்சணை:
மணப்பெண்ணிடம் 
பணம் வாங்கும் - நீங்கள் என்ன
பிணங்களா?
இல்லை,
ஒரு நாள் பரம்பரை பிச்சைக்காரர்களா?
பாசத்திற்கும் நேசத்திற்கும்
விலை பேசும் வியாபாரிகளா? 
இல்லை,
பொய் அன்பை தரும் விபச்சாரிகளா?

வரதட்சணை வாங்கும் மூடர்களே!
கேளுங்களேன் வாரதட்சணை!

20 வருடம் காப்பாற்றிய 
                       கற்பினை
                       காலமாக்கி
ஓர் வருடம் (இ)கஷ்டப்பட்டு
                                 கருவை
                                 உருவாக்கி
வாழும் காலம் வரை
                 கரங்களாய்
                 கண்களாய்
                 கடவுளாய் இருக்கும்
என்னிடமா  தட்சணை ???

அம்மி மிதித்த என்னிடம்
இம்மியளவு புன்னகை எதிர்பாராமல்
                           பொன்நகை எதிர்பார்ப்பவனே!!!
அருந்ததியை மட்டும் நிமிர்ந்து பார்த்து
வேறுகதி இல்லையென வரும் எனக்கு
                                சதி செய்யும் வெட்டியானே!!!

என் கணவன் பதவிக்கு உன்னை அமர்த்த 
        நான் வரதட்சணை தரவேண்டும் என்றால்,

நான் பார்க்க போகும்,
                                மனைவி
                                மருமகள்
                                தாய்
                                   வேலைகளுக்கு
          வரவரவரதட்சணை
                     தரவேண்டுமடா!!!
                                ன் ன்னனே!!!

Saturday, 20 October 2012

27 - பித்தளையாகட்டும் பிளாட்டினம் - Confidence


எழுந்து வாடா தோழா!!!
ஏட்டு சுரக்காய் வேண்டாம்...
புத்தியை முதலில் திற!
புத்தகத்தை பிறகு திற!

கலை கற்றது போதும்,
களை பிடுங்கலாம் வா...
எண்ணெயில் வெண்ணெய் எடுக்கலாம்!
வெண்ணிலவில் தேனிலவு வைக்கலாம்!

சூரியனுக்கு வேர்க்கிறதாம்,
          தீயணைப்பு படையனுப்பு!!!
                    - வழியில்
சந்திரனுக்கு குளிருதாம்,
          தீக்குச்சி சேர்த்தனுப்பு!!!

புயலுக்கு பதில் பூவும்
பூவுக்கு பதில் புயலும்
                வை!
       வழியட்டும் வைரம்.....
                பித்தளையாகட்டும் பிளாட்டினம்......

26 - நாணம் - Modesty


25 - போராளி - Warrior


வாழ்நாள் முழுவதும்
வாழ்நாள் முடியும் வரை
"போராளி"
அடையமுடியா
இலக்கை நோக்கி
- ஈசள் -
நம்பிக்கையுடன்
வாழும்
ஓர் நாளும்

24 - நட்பு - Friendship


கண்ணாடி
   என் முன்னாடி
      என்றும் உடையாதது
        உடைத்தாலும் பலபிம்பம்
          சிரித்தால் சிரிக்கும்
            அடித்தால் பொறுக்கும்
              யாவருக்கும் இருக்கும்
                இல்லாமல் முடியாது
                  முடிந்தால் இருக்காது
                    உண்மையெனில் உயிரானது
                      இல்லையெனில் உடலானது
                        கடலும் அலையும்
                          காற்றும் பாயும்
                            இடையில் ஒருவன்
                               சேர்த்து அணைக்கும்
                                  துன்பத்தில் சமயத்தில்
                                    சுற்றம் சுருண்டாலும்
                                      உறவு உடைந்தாலும்
                                        நாடி வரும்
                                            நட்பு...

23 - நகைச்சுவை- Joke


22 - மழையில் கனவு - Dream in the rain

" டிசம்பர் மாதத்து இலையுதிர் காலம்
9am -ல் சென்றேன் நைல் நதியோரம்
திடிரென தாக்கியது ஒரு மின்னல்
பயந்தேன் பின் பார்த்தேன் பின் ரசித்தேன்
அது மின்னல் கோடி சேர்ந்த ஒரு கொடியென

அப்போது கதிரவன் மறைந்திருந்து டார்ச் அடிக்க
உனக்கு கண் கூசும் என் பின்னால் ஒளி என்றேன்
ஓடி ஒளிய, ஆனது 9pm

தெரிந்தது அழகு
     அதனை மூடியது பனி
          அதன் பணி போல்

அவ்வசந்தம் என் அருகில் வர என்னில் வெடித்தது
                                                                                          அணு உலை
அப்போதும் ஓர் இன்னிசை மெல்லிசையாய்
                                                                         அது மூச்சு
அருகில் இடியும் வந்து முழங்க
                                                           அது பேச்சு "

அதில் இதை அவள் சொன்னாள்
பின்
இதயத்தை இடமாற்ற
மயங்கி கண் மூடி தேனில் நனைந்தேன்
திடிரென கண் திறந்தேன்
அது என் Dream-ல்
நனைந்தது மழையில்...

Thursday, 18 October 2012

21 - மூன்று வார்த்தை


மூன்று வார்த்தை
முகம் பார்த்துச் சொல்ல
மூச்சும் வரவில்லை

20 - கடவுள் - God


தங்க சிலை
கோயிலை பூட்டிவிட்டு
கதவில்லா தன்
வீட்டுக்குச் செல்கிறான்
பூசாரி

19


உதவிக்கு வழி காட்டும்
பலகையின் பின்னால்
கடந்த பாதை

Wednesday, 17 October 2012

18 - முடிந்ததுக் கதை 1 - அரசியல்


அரசியல்

அன்பான
ஆக்கபூர்வமான
அக்கால அரியணைக்கு
நிகராக - இக்கால
அரசியலா???

ஐந்தாண்டு ஆட்சியோ
முடியப்போகும் நேரம்
அடுத்தக் கட்டம்
மலையேறிக் கொண்டிருந்தது

எதிர்க்கட்சியோ
ஐந்தாண்டு அமரா
ஆத்திரத்தினை, ஒலிப்பெருக்கியால்
ஆற்றிக் கொண்டிருந்தது

மக்களோ
எவனோ மிட்டாய் கடையை
முறைத்தது போல்
குறைப்பதை
பார்த்துக் கொண்டு
மட்டும் இருந்தனர்

அவர்கள் கட்சினரோ
வரவு முன் செலவு
என எண்ணி
தண்ணியாய்
செலவு செய்தனர்

தண்ணீர் கிடைக்காத
இவ்வாட்சியை விட
தண்ணீ தரும்
இவர்கள் மேல்
எண்ணினர் குடிமக்கள்

பக்க பலத்திற்கு
மத்திய ஆட்சி வர
கூட்டத்தில் மக்கள்
பிரியாணியை
எதிர்பார்த்திருந்தனர்

ஆளுங்கட்சியோ
இப்போது விளைச்சல்
அமோகமாக இருப்பதால்
அடுத்த குத்தகையை
கைப்பற்ற எண்ணினர்

அவர்கள் கட்சினரோ
ஐந்தாண்டு அமுக்கியதில்
சில்லறைகளை
தலைக்கு 1௦௦௦
இறைத்துக் கொண்டிருந்தனர்

ஐய்யய்யோ...
என் வீட்டில் வெறும்
9 பேர் தான்
மக்கள்தொகை பெருக்கும் சங்கம்

பக்க பலத்திற்கு
மத்திய எதிக்கட்சி வர
கூட்டத்தில் மக்களோ
கூட்டமாய் வேறு
கூட்டணி அமைத்தனர்

இருக்கட்சினர்களும்
கோலிவுட்டை
குளத்தில் இறக்க
அவர்களும் ஆழம் தெரியாமல்
அவமானப்பட்டனர்

தொலைக்காட்சியில்
இவர்கள் தொல்லை
என வெளியே வந்தால்
அங்கேயும் தொல்லை
மேடை போட்டிருந்தது

குழந்தைக்கு பலகை
வாங்கி தரா மூடர்கள்
கட்-அவுட் பலகையை
கட்டிக் கொண்டிருந்தனர்

சீரியல் லைட்டுக்கு
மின்சாரம் போக
சிரித்துக் கொண்டிருந்தது
வீட்டு மின்சாரம்

புதிய
சலுகைகளும் இலவசங்களும்
பிறந்ததை
கொண்டாடினர்
அரசு ஊழியர்கள்

பொய்களும் வண்டிக்
கட்டிக் கொண்டு
வலப்பக்கம் ஒரு பொய்
இடப்பக்கம் ஒரு பொய்
என மாறி மாறி
மாரி பொழிந்தது

தேர்தலோ
மும்மூரமாய் வர
கள்ள ஓட்டுகளும்
நல்ல ஓட்டுடன்
ஒட்டி பிறந்தது

வாக்கு எண்ணிக்கையில்
நாடு நடுங்கிக் கொண்டிருந்தது

இருக்கட்சிகளும்
கூட்டணிக் கட்சிகளை
 எதிர்ப்பார்க்க
கூட்டணி தலைவர்களோ
தரசு வைத்திருந்தனர்

ஏதோ ஒரு கட்சி
ஆட்சிக்கு வர
சாட்சி இல்லாமல்
மீண்டும்
-> முடிந்ததுக் கதை

17 - காமராசர் - Kamaraj

காமராசர்

காமராசராக இருந்தும் கன்னியின் வாசம் அறியாதவரே!
பலரின் கண்ணீரை துடைத்தவரே!
கடவுளை விட சிறந்த கல்வியின் கண்ணை திறந்தவரே!
கல்வி கற்காத கர்ம வீரரே!
பேச்சாற்றலால் சுதந்திரத்தினை மனதில் மின்சாரமாக்கியவரே!
மின்சாரத்தால் குக்கிராமத்தினையும் மிளிரச்செய்தவரே!
கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தி புரட்சிக்கு வித்திட்டவரே!
மதிய உணவும் ஊட்டிய தாயானவரே!
வைகையில் கை வைத்து வளமான மண்ணாக மாற்றியவரே!
சாத்தநூரையும் சத்துள்ளதாக உருவாக்கியவரே!
பதவி ஆசை கடுகும் இல்லா பெருந்தன்மை தலைவரே!
வாடகை வீட்டிலேயே வசித்தவரே!
இரு இந்திய பிரதமர்களை உருவாக்கிய முதலமைச்சரே!
பலரின் உள்ளத்திலும் அமர்ந்தவரே!
ஆறு வரை படித்து, பத்து வரை இலவச கல்வி  அளித்தவரே!
பல்கலைகழகத்தின் பெயரையே மாற்ற வைத்தவரே!
விசித்திரமானவரே!
உங்கள் மணத்தினை ஏற்றுள்ள எங்கள் மனம், 
என்றும் வாடா மலராய் மணம் வீசும்... 

16 - நகைச்சுவை- Joke


உன் சில்லரை சிரிப்பிற்கு
என் ஒரு சிறிய அறை - இதயத்தில்
மற்ற மூன்றும் கல்லறைகள்

15 - முத்தமிட்டால் தித்திக்கும்


தாய்க்கு சேயை
நிலவுக்கு இரவை
மழைக்கு பூமியை
மைக்கு காகிதத்தை
கவிக்கு கவிதையை
கற்பிற்கு கண்ணகியை
காற்றுக்கு புல்லாங்குழலை
வண்ணத்திற்கு வானவில்லை
எனக்கு கண்ணாடியை
முத்தத்திற்கு...
உன்னை

Tuesday, 16 October 2012

14 - விழி - Vision


என் ஓர் விழியால்
என் இரு விழிகளை
காண்கிறேன்
உன் ஓர் விழியால்

13 - ஓவியம் - Picture


துப்பப்பட்ட எச்சையினை
துடைக்க மறுத்து
காகிதம்

12 - நீயும் மலரடி - Paronomasia


மணம் உமிழும்
உன் மனத்தில்
என் சிள்வண்டு
மனத்தை
சிறை வைக்க
சிரிப்பு நிறத்தினை
சித‍றச் செய்வாயோ!!!

''நீயும் மலரடி''

Monday, 15 October 2012

11 - கடல் - Sea


கடல்
வானத்தின் ஊமை பார்வைக்கு
வளைந்து ஆடுகிறாய்!

கங்காருவின் கருவறைக்கும் மேலாக
கர்பத்தை உற்றிருக்கிறாய்!

அழுது வற்றும் முகிலுக்கு
ஆறுதல் ஊற்றுகிறாய்!

உப்பிட்ட மண்ணை மறவாமல்
வற்றாமல் வளருகிறாய்!

கொடிய மிருகங்களிடமிருந்து எல்லையாய்
கடிவாளம் போடுகிறாய்!

வாடும் விலங்குகளுக்கு வாழ்விடமாய்
தெய்வம் ஆகுகிறாய்!

நாட்டின் நரம்பான நதிகளுக்கு
இடுகாடு ஆகுகிறாய்!

கதவு இல்லா கஞானாவை
நாட்டில் விரித்திருக்கிறாய்!

இவற்றிற்கு சிலசமயம் லாபம்பெற

சுனாமியால் சுருட்டுகிறாய்!

நீல நிற ஆடையற்ற தேவதையே - நீ
               அழகானவளோ???
                              ஆபத்தானவளோ???

Friday, 12 October 2012

10 - சிலேடை - Paronomasia


உன் காதோரத்து முடி
கழுத்தோரத்தில்
முடி போடச்சொல்லும்...

9 - பெரியவன்


பெரியவன்

பெரியவன்
கடந்து செல்ல வழி எப்போதும்
பாகுபாடின்றி எல்லோருக்கும்
         ---கதவு

8 - கடவுள் - God


கோயிலுக்கு
             வெளியே
                                      பிச்சைக்காரன்

            உள்ளே
                                     பூசாரி

7 - நகைச்சுவை - Joke


அவள்
            இமைக்கு பல்லாயிரம்,
            இதழுக்கு  பல்லாயிரம்,
            இடைக்கு  பல்லாயிரம்
      என ரசிகர்கள்
                வாடிக்கையாளர்கள்
                         'வேடிக்கை பொம்மை'க்கு

6 - தாஜ்மகால் - Taj Mahal


தாஜ்மகால்

அணுவணுவாய் அளந்தேன்
என் கண்களினால்
குழி வெட்ட என் மனத்தில்
உன்னை புதைக்க
நீ என்னை விட்டு சென்ற பின்

உன் மனம் கல்லறையாக இருக்கலாம்
                                                                      -ஆனால்
என் மனம் தாஜ்மகால், என்றும்...

Thursday, 11 October 2012

5 - நட்பு - Friendship


நட்பு
ஆயிரம் பேர் வந்தாலும் - என்
அன்பை மறந்தாலும் - என்
ஆருயிர் பிரிந்தாலும் - என்
ஆட்டோகிராப் நினைவுப்படுத்தும் - என்னை

4 - மீசை - Mustache


கார்பன்-டை-ஆக்ஸைடில்
முளைத்த
கருப்பு மலர்
அவன் மீசை

Wednesday, 10 October 2012

3


உன்னிடத்தில்
மீண்டும் மீண்டும் விழுந்தெழுந்த
என் நினைவுகள்
என்னை நனைக்கின்றன
வியர்வையில்!!!

Tuesday, 9 October 2012

2 - கவிதை - Philosophy


ஒரு வரியை
முழுவரியாக
எழுத விடாமல் தடுக்கிறது
இந்த 'கவிதை தத்துவம்'

1


''நேற்று நீ என்னுடன்
இருந்திருந்தால்
இன்றை மறக்க செய்திருப்பேன்''
என்ற தலைவனிடம்,
''நேற்றை மறந்தாயா?''
என்றாள் தலைவி