கண்ணாடி
என் முன்னாடி
என்றும் உடையாதது
உடைத்தாலும் பலபிம்பம்
சிரித்தால் சிரிக்கும்
அடித்தால் பொறுக்கும்
யாவருக்கும் இருக்கும்
இல்லாமல் முடியாது
முடிந்தால் இருக்காது
உண்மையெனில் உயிரானது
இல்லையெனில் உடலானது
கடலும் அலையும்
காற்றும் பாயும்
இடையில் ஒருவன்
சேர்த்து அணைக்கும்
துன்பத்தில் சமயத்தில்
சுற்றம் சுருண்டாலும்
உறவு உடைந்தாலும்
நாடி வரும்
நட்பு...
No comments:
Post a Comment