எழுந்து வாடா தோழா!!!
ஏட்டு சுரக்காய் வேண்டாம்...
புத்தியை முதலில் திற!
புத்தகத்தை பிறகு திற!
கலை கற்றது போதும்,
களை பிடுங்கலாம் வா...
எண்ணெயில் வெண்ணெய் எடுக்கலாம்!
வெண்ணிலவில் தேனிலவு வைக்கலாம்!
சூரியனுக்கு வேர்க்கிறதாம்,
தீயணைப்பு படையனுப்பு!!!
- வழியில்
சந்திரனுக்கு குளிருதாம்,
தீக்குச்சி சேர்த்தனுப்பு!!!
புயலுக்கு பதில் பூவும்
பூவுக்கு பதில் புயலும்
வை!
வழியட்டும் வைரம்.....
பித்தளையாகட்டும் பிளாட்டினம்......
No comments:
Post a Comment